தற்பொழுது பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை.எனவே குழந்தைகள் நன்றாக சாப்பிட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பத்து ஏலக்காய்
2)ஒரு துண்டு சுக்கு
3)அரை தேக்கரண்டி சீரகம்
4)கால் தேக்கரண்டி மிளகு
5)இரண்டு திப்பிலி
6)ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை
7)அரை தேக்கரண்டி தேன்
செய்முறை விளக்கம்:-
முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஏலக்காய்,சீரகம்,கருப்பு மிளகு,திப்பிலி ஆகியவற்றை அதில் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு வறுத்த பொருட்களை ஆறவைக்க வேண்டும்.
பிறகு மிக்சர் ஜாரில் சுக்கு மற்றும் வறுத்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து தயாரித்து வைத்துள்ள பொடி அரை தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு பருக கொடுக்க வேண்டும்.தினமும் இந்த பானம் குடிக்கும் குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்கும்.
தயாரித்து வைத்துள்ள பொடி ஐந்து கிராம் அளவிற்கு எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொடியை மிக்ஸ் செய்து கொடுக்கலாம்.