நாளுக்கு நாள் கண் பார்வை மங்கல் பிரச்சனையானது அதிகரித்து காணப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் கண் பார்வை குறைபாட்டை சந்திக்கின்றனர்.
வளர்ச்சி அடைந்த உலகில் மொபைல்,கணினி போன்றவற்றின் பயன்படுத்து அதிகரித்து வருவதால் இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண் பார்வை திறன் இயற்கையாக மேம்படும்.
தீர்வு 01:-
*பாதாம் பருப்பு
*பசும் பால்
முதலில் 10 பாதாம் பருப்பை நெயில் வறுத்து நன்றாக ஆறவிட்டு பவுடராக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து பருகி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
தீர்வு 02:-
*கருப்பு மிளகு
*தேன்
நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு தட்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.
தீர்வு 03:-
*துத்தி இலை
*தேன்
சிறிதளவு துத்தி இலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.
தீர்வு 04:-
*தும்பைப் பூ
*துளசி
*தேன்
ஒரு கைப்பிடி தும்பைப் பூ மற்றும் ஒரு கைப்பிடி துளசி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கிட்ட பார்வை குறைபாடு சரியாகும்.
தீர்வு 05:-
*அருகம்புல் – ஒரு கைப்பிடி
*தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் அருகம்புல்லை நன்றாக் காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்து சேமித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி அருகம்புல் பொடி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
தீர்வு 06:-
*கரிசலாங்கண்ணி – சிறிதளவு
*வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
இவை இரண்டையும் பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து பருகி வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
தீர்வு 07:
*கேரட்
*தண்ணீர்
முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய அரைத்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.