டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு!! தமிழக அரசு தீபாவளி சிறப்பு போனஸ்!!

0
159
For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!
For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!

தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து தனியார்துறை மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் (bonus) வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு  முக்கிய தகவலை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அந்த வகையில்  சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டு அந்த பிரிவின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்  மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க உள்ளது என  தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக  ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும் என  தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Previous articleரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! 2 மாதங்களாக துவைக்கப்படாத கம்பளிகள்!!
Next articleஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஆக்ஷனில் இறங்கும் சூப்பர் ஸ்டார் !