இட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

0
230

இட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் காலை மற்றும் இரவு நேரங்களில் டிபன் போன்ற உணவை தான் உண்கின்றார்கள். இந்த டிபனில் முதன்மை பெற்றது இட்லி தோசை தான். தினமும் ஒரே மாதிரியான குழம்பு சட்னி போன்றவற்றை உண்பதற்கு பதிலாக புதிய வகையில் கொடிகளை பயன்படுத்தியும் இட்லி தோசையை சாப்பிடலாம்.

புதினா பொடி மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அந்த புதினாவில் தினமும் சட்னி செய்து சாப்பிடுவதை விட ஒரு நாள் சட்னி மற்றொரு நாள் புதினா பொடி என வகை வகையான செய்து சாப்பிடலாம். புதினா பொடி ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கிறது.

புதினா பொடி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

உளுத்தம் பருப்பு கால் கப், வர மிளகாய் 25, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு மற்றும் புதினா 5 கொத்து.

செய்முறை 1

முதலில் ஒரு கடாயில் எடுத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பை எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 2

உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வந்த பிறகு வர மிளகாய் அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

செய்முறை 3

அவை இரண்டும் வறுபட்டவுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை 4

புதினா கெடாமல் இருப்பதற்காக கடாயில் தனியாக உப்பு சிறிதளவு சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை 5

கடாயில் சிறிதளவு பெருங்காய சேர்த்து வறுத்துக் கொண்ட பிறகு முதலில் வருத்த நான்கு பொருட்களையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 6

கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து புதினாவை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 7

அனைத்து பொருட்களையும் வறுத்த பிறகு முதலில் வறுத்து வைத்திருந்த உளுத்தம் பருப்பு மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் உப்பு போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 8

நல்லெண்ணெயுடன் சேர்த்து வறுத்து வைத்திருந்த புதினாவை மிக்ஸியில் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும் சுவையான புதினா பொடி இப்படி செய்து பாருங்கள் கட்டாயமாக அனைவரும் விரும்பி உண்பார்கள்.

Previous articleவிருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleஇதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!