பாதாம் பிசின் பெண்களின் மாதவிடாயை சீராக்க உதவுகிறது.இந்த பொருள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.பாதாம் மரத்தில் இருந்து வெளியேறும் ஒருவகை திரவக் கழிவுகள் தான் இந்த பாதாம் பிசின்.
இதை நன்றாக காயவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து பிசினாக விற்கின்றனர்.பாதாம் பிசினை பொடித்தோ அல்லது ஊறவைத்தோ உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம் பிசினை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தலைமுடி கருமையாக மாறும்.பெண்களுக்கு ஏற்படும் பல நோய் பாதிப்புகளுக்கு பாதாம் பிசின் அருமருந்தாக பயன்படுகிறது.பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்து பருகி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.உடலில் அதிகரித்த உஷ்ணம் குறைய பாதாம் பிசின் சாப்பிடலாம்.
ஆண்களின் விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை போன்றவற்றை சரி செய்ய பாதாம் பிசின் பயன்படுத்தலாம்.தினமும் காலையில் எழுந்ததும் பாதாம் பிசின் பொடி சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல மாற்றம் உண்டாகும்.
அதேபோல் பாதாம் பிசினை கொண்டு சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் தற்பொழுது மாதங்கள் பல ஆனாலும் மாதவிடாய் ஏற்படுவதில்லை என்பது பெண்களிடையே அதிகரிக்கும் பிரச்சனையாக இருக்கின்றது.
முறையற்ற மாதவிடாய் பாதிப்பால் அவதியடைந்து வரும் பெண்கள் பாதாம் பிசினை கொண்டு தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:
1)பாதாம் பிசின் பொடி – இரண்டு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பாதாம் பிசின் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும்.