பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

0
323
For the attention of individual candidates who are writing the 10th class public examination! You can download the hall ticket!
For the attention of individual candidates who are writing the 10th class public examination! You can download the hall ticket!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்கியது, அதனை அடுத்து செவ்வாய்க்கிழமை பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை எழுத்து தேர்வு  நடைபெற உள்ளது.அதனால்  தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்!
Next articleதெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்!