நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

0
148
For the attention of NEET students! The announcement made by the National Examination Agency!
For the attention of NEET students! The announcement made by the National Examination Agency!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல், வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம்  180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் அதற்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஓரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

மேலும்  ஒரு மாணவர் மூன்று முறை இந்த தேர்வினை எழுதலாம்.  இட ஒதுக்கீடு பெரும் பிற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறை இந்த தேர்வு எழுதலாம். என  விதிமுறைகள் உள்ளது. மேலும் கொரோன  பரவல் காரணமாக இந்த தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2022 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கு நுழைவுத்தேர்வு ஆக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்விற்கு விண்ணப்ப படிவம் ஆனது ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி மே இருபதாம் தேதி வரை கலாஅவகாசம் வழங்கப்பட்டது.

மேலும்  நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண்ணை முக்கியமானது. நீட் தேர்வானது ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

மேலும் மாணவர்களும் வலைதள பக்கத்தில் நீட் தேர்வு அன்றே பல்வேறு  போட்டி தேர்வுகள் நடக்கிறது என்றும் பதிவிட்டு வந்தனர்.  அதன் பிறகு தேசிய தேர்வு முகமை மையமானது திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி க்யூட் தேர்வும் ,ஜூலை 17ஆம் தேதி நீட் ,தேர்வு ஜூலை 21ஆம் தேதி ஜிமெயின் தேர்வும் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வரும் 17 ஆம்  தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்யை அதிகாரப்பூர்வமான http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Previous articleவட சென்னையில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
Next articleஅதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!