பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. பொது தேர்வுகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் எழுதினார்கள்.இந்நிலையில் தற்போது நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு பொது தேர்வும் நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த மே மாதம் ஆறாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்ததேர்வில் தமிழகம் முழுவதும் 9.3லட்சம் மாணவ ,மாணவிகள் எழுதினார்கள்.இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ ,மாணவிகள் அவரவர்கள் படித்த பள்ளிகளில் சென்று இன்று காலை பத்து மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும் தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சென்று சான்றிதழ்கள் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.