நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! உத்தேச விடைகள் வெளியீடு!
2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல் வேதியல் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் அதற்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஓரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாணவர்கள் மூன்று முறை இந்த தேர்வினை எழுதலாம் மற்றும் இட ஒதுக்கீடு பெரும் பிற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறை இந்த தேர்வு எழுதலாம் எனவும் விதிமுறைகள் உள்ளது.
மேலும் கொரோன பரவல் காரணமாக இந்த தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது இந்நிலையில் 2022 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கு நுழைவுத்தேர்வு ஆக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்விற்கு விண்ணப்ப படிவம் ஆனது ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி மே இருபதாம் தேதி வரை கலாஅவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண்ணை முக்கியமானது. நீட் தேர்வானது ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. மாணவர்களும் வலைதள பக்கத்தில் நீட் தேர்வு அன்றே பல்வேறு தேர்வுகள் நடக்கிறது என்றும் பதிவிட்டு வந்தனர்.
மேலும் தேசிய தேர்வு முகமை மையமானது திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி க்யூட் தேர்வும் ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு ஜூலை 21ஆம் தேதி ஜிமெயின் தேர்வும் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் அந்த அறிவிப்பின்படி கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வில் 18,72,343 விண்ணப்பித்ததில் 17,78,725 வருகை தந்த தேர்வு எழுதினார்கள் என்ற தகவலை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிலையில் நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது விசேஷ விடைகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தேர்ச்சி தேர்வு முகமை அறிவித்துள்ளது தொடர்பாக எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அதனை தெரியப்படுத்த தேர்வுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.