பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு!
மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. குறிப்பாக நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொதுத்தேர்வை வருடத்திற்கு சராசரியாக 12 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றது. அந்த வகையில் முதற்கட்ட தேதி ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடையும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மே 24 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை கியூப் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொது நுழைவு தேர்வு என்பது மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இந்தியாவில் உள்ள தொழில் முறை கல்லூரிகளிலும் முழு நேர பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக அவற்றின் தொடர்புடைய மாநிலங்களில் நடத்தப்படும் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.