உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசானது ஆளுநர் ரவி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் தமிழக அரசானது சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்கள் உண்மையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் சட்டவிரோதம் இருப்பதாகவும் அவருக்கென தனி அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியதோடு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் எதுவும் செல்லாது என்ற தீர்ப்பினையும் வழங்கியது.
முக்கியமாக தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாக இருக்கிறது என்று அறிவித்ததோடு ஆளுநர் ரவி நிராகரித்த 10 முக்கிய மசோதாக்கள் இன்று சட்டமாக அமலுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசுகள் செய்திருக்கக்கூடிய வழக்கினுடைய விவரங்கள் அதற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
நேர்மையற்ற முறையில் ஆளுநர் செயல்பட்டு இருப்பதாகவும் உச்ச நீதி மன்றத்தின் உடைய தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு 415 ஆவது பக்கத்தில் ஆளுநர் அனுப்பி வைக்கக்கூடிய மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஒருவேளை 3 மதங்களுக்குள் முடிவெடுக்க முடியவில்லை என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் அவர்களுடைய மசோதாக்கலுக்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தக்க தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் மாநிலங்கள் குடியரசுத் தலைவர் மீதான குற்றங்களை நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை முதல் முறையாக குடியரசு தலைவருக்கு நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.