இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை.
இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகியது குரங்கம்மை நோய்.
இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.இந்நிலையில் 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.