ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற முதல் நடவடிக்கையாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-ன் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி,
01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது என்று பொது சுகாதார துறை தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மாவட்ட வருவாய் மற்றும் சுகாதார இணை மற்றும் வருவாய்த்துறை இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
தற்பொழுது பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியரின் சிறப்பு சான்றிதழ்களில் அவர்களுடைய பெயரானது உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் என்றும், ஒருவேளை அவர்களுடைய பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடைய பெற்றோருக்கு இந்த தகவலினை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பம் பெற்ற தாலினை கொண்டு பள்ளிகளிலேயே பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்தலுக்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, இந்த பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதர் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.