மகளிர் சுய உதவி குழுக்களுக்கு2000 கோடிக்கு மேல் கடன் உதவி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதத்தில் மகளிர் சுய உதவி குழு வுக்கு சுழல் நிதி வழங்கும் பிரம்மாண்ட விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 542 பயனாளிகளுக்கு, 2 ஆயிரத்து 150 கோடி அளவிலான கடன் உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

அப்போது அவர் பேசியதாவது, பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர் சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் அவர்களுக்கு தன்மானத்துடன் வாழ கூடிய அளவிற்கு தன்னம்பிக்கையை கொடுத்தாக வேண்டும் அதன் அடிப்படையில் தான் கருணாநிதி மகளிர் சுய உதவி குழுவை ஆரம்பித்து வைத்தார். தமிழகம் முழுவதும் இருக்கின்ற 58462 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2750 கோடி அளவுக்கு கடன் உதவியும், நலத்திட்ட உதவிகளும், கிடைக்க இருக்கின்றன. இதனை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என கூறியிருக்கிறார்.

நாட்டிலேயே முதன்முதலாக பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த ஆட்சி தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி திமுக ஆட்சியில் தான் இந்த குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் ஆரம்பித்திருந்தாலும் அதனையடுத்து கடலூர், விழுப்புரம், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த குழுக்கள் தொடங்கப்பட்டன. அடுத்த ஆட்சி இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை நான் இதனை அரசியலாக்க விரும்பவில்லை. 1996 ஆம் ஆண்டு மறுபடியும் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் சுமார் 14 மாவட்டங்களில் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன என தெரிவித்து இருக்கிறார்.

முதலில் 5177 சுய உதவி குழுக்களும் அதற்கு அடுத்த வருடத்தில் 7 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 14 மகளிர் சுய உதவி குழுக்களும் அதற்கு அடுத்த வருடத்தில் எட்டு மாதங்களில் 15 1029 சுய உதவி குழுக்களும் ஏற்படுத்தப்பட்டது. இப்படியே அது படிப்படியாக வளர்ந்தது 2006ஆம் ஆண்டு நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஆயிரக் கணக்கில் இருந்த இந்த குழுக்கள் லட்சக்கணக்கில் என்ற நிலைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் தற்சமயம் 8.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68,000 பெண்கள் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு குழுக்கள் செயல்படுகிறது என்றால் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இதில் இயங்கி வருகிறார்கள். அதற்கு விதை போட்டவர் கருணாநிதி அதனால்தான் மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்று அவரை என்றும் போற்றி க் கொண்டு உள்ளோம். பெண்களை ஒருங்கிணைக்கும் விதத்தில் கடன் கொடுக்கின்றோம். அதை அவர்கள் திருப்பி கட்டுகிறார்கள், இது ஏதோ ஒரு வழக்கமான திட்டம் என்று நினைத்துவிடக்கூடாது, எத்தனையோ கடன் கொடுக்கும் திட்டத்தை போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லமுடியாது. இந்த திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும், அடிப்படையாகவும், சுழல் நிதி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்த நிதி ஆண்டில் மட்டும் 17 1479 சுய உதவிக் குழுக்களுக்கு 87 .39 ஒன்பது கோடி சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உள்ளிட்டோரை கண்டறியப்பட்டு 5 1838 சங்கங்கள் மூலமாக 11.59 கோடி ரூபாய் இந்த வருடத்தில் விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் 36 லட்சத்து 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடத்தில் 20,000 கோடி கடன் கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் 6277 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது, இந்த மாத கடைசியில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த வருடத்திற்குள் அடுத்த பத்தாயிரம் கோடி இலக்கை எட்ட உத்தரவிட்டு இருக்கின்றேன். சிறப்பு முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும், கேட்டுக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

பத்தாயிரம் முதல் 20 லட்சம் வரையில் சொத்துப் பிணையம் எதுவும் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்திரவாத நீதியும் வழங்கப்பட்டு . வருகின்றது. இப்படி ஏராளமான திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு தெரிவித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம், ஆனால் நிறைவேற்ற இயலாமல் விட்டுவிட மாட்டோம். எல்லாவற்றையும் நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம், மகளிர் மேம்பாடு மூலமாக அவர்களுடைய குடும்பமும், அந்த குடும்பத்தின் மூலமாக சமுதாயமும், மேம்பாடு அடையும். சமூக மேம்பாட்டு தான் இந்த மாநிலத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது என கூறியிருக்கிறார்.

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கையில் ஒன்று பெண்ணுரிமை மகளிர் மேம்பாடு என்பதாகும். பெண்களின் உரிமைக்கான புரட்சிகர சீர்திருத்தத்தை நூற்றாண்டுக்கு முன்பே முழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அத்தகைய தலைவர் தான் தந்தை பெரியார் அவர் வழி வந்த திமுக மகளிருக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது உட்பட பெண்களின் முன்னேற்றத்திற்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். என நினைவு படுத்தி உள்ளார் முதலமைச்சர்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே பெண்களுக்கு கட்டணம் இல்லாத பேருந்து பயணத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட கை தான் இந்த கை. ஐந்து பவுனுக்கு கீழ் அடமானம் வைக்கப்பட்டு பெற்ற கடனை ரத்து செய்து இருக்கின்றோம். மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடன்கள் 2756 கோடி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி செலவில் கடன் வழங்கி இருக்கிறோம், இதன் மூலமாக தொழில் முனைவோர்கள் ஆக மட்டுமல்ல தன்னம்பிக்கை வல்லவர்களாகவும், அனைத்து பெண்களும் உயரவேண்டும் அப்படி வாழ்வதற்கான மற்றும் உயர்வதற்கான எல்லா உதவிகளையும் நம்முடைய ஆட்சியின் மூலமாக இவைகள் அனைத்தும் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என அவர் பேசியிருக்கிறார்.