ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 16ஆவது ஆண்டாக போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் பத்திரிக்கை 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் இருந்து வருகிறார்.
மேலும், இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார், இரண்டாவது இடத்தை 74.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி பிடித்துள்ளார். மேலும், மூன்றாவது இடத்தை 31 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார் பிடித்துள்ளார்.
https://twitter.com/forbes_india/status/1445925857487327234?t=YcAeNBD7at315Blw65Wtqg&s=19