வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி!
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் பேச, எழுத, “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
வெளிமாநிலங்களான பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஸ்டிரா போன்ற பல்வேறு மாநில தொழிலாளர்களும் மற்றும் அவர்களது குடும்பங்களும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் மொழி தெரியாததால் கல்வியை தொடர முடியாமல் பல குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர், மேலும் சில குழந்தைகள் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றன.
இது குறித்து தொழிலகப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் பொது வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் உள்ளனர்.
அவர்களுக்கு “தமிழ் மொழி கற்போம்” திட்டத்தின் மூலம் அவர்களது தாய்மொழியின் வாயிலாக, தமிழ்மொழி கற்றுத்தரப்படும் மேலும் இதற்காக ஹிந்தி, ஒடியா என மொழித்திறனுள்ளோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர்.
மேலும் அனைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் விவரங்களை அளிக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதனால் தமிழ்மொழி கற்பதுடன், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் இடை நிற்றல் தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.