வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களின் குறிப்பிடப்பட்ட சம்பள தொகையாக ஒரு மணி நேரத்திற்கு 17.30 டாலராக இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இதனை உயர்த்தி 17.35 டாலராக ஒரு மணி நேரத்தில் வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது கனடாவில் பணிபுரியக்கூடிய இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கனடாவின் வாழ்க்கை சூழல் கடுமையாக மாறி வருவதால் அவற்றை வெளிநாட்டிலிருந்து தங்களுடைய நாட்டில் பணி புரிய வந்திருக்கக்கூடிய இந்தியர்கள் சமாளிக்கும் நோக்கத்தில் இது போன்ற ஒரு முடிவை கனடா அரசு எடுத்து இருப்பதாகவும் வாழ்க்கை செலவுகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இது போன்ற ஒரு சம்பள உயர்வு முடிவானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.