உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நம் நாட்டிற்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை போன்று அமைந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். இந்தியாவில் இருக்கும் பலருக்கு இன்றுவரை தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவும் ஆசையாகவும் உள்ளது.
இப்படித்தான் வெளிநாட்டில் உள்ள பலருக்கும். வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல சுற்றுலா பயணிகள் உலக அதிசயங்களில் ஒன்றான நம்முடைய தாஜ்மஹாலை காண அதிக அளவில் தற்போது படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்று உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது தந்தையுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.
இவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது :-
நான் தாஜ்மஹாலை அதிக சந்தோஷத்தோடு கண்டு களித்தேன். ஆனால் தாஜ்மஹாலில் உள்ள சில விஷயங்கள் எங்களை வருத்தப்பட செய்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக நுராத் குறிப்பிட்ட கருத்துக்களின் படி இதுவரை உலகின் 70 நாடுகளை சுற்றி உள்ளதாகவும் அதே போல தாஜ்மஹாலுக்கு தற்போது வருகை தந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றிணையும் வைத்திருக்கிறார்.தாஜ்மஹாலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அவர்கள் பல மைல்கள் கடந்து வரும்போது அப்படி வருபவர்களுக்காக தனிவரிசை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் ஆனால் பல மணி நேரமாக லைனிலேயே நின்றதாக விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வயதான தனது தந்தையும் நீண்ட நேரம் நின்றதன் காரணமாக உடல்நிலை கொஞ்சம் சோர்வடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ள நுராத், வெளிநாட்டு பயணிகளுக்கு என்று தனியாக ஒரு கியூவை தாஜ்மஹாலில் வைக்கும் படியும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதை தொடர்பாக தாஜ்மஹாலின் பாதுகாப்பு உதவியாளர் பிரின்ஸ் வாஜ்பாய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தாஜ்மஹாலில் வெளிநாட்டவர்க்கென தனியாக ஒரு வரிசை இருந்தது எனவும், பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்ததால் அதனை ஒரே வரிசையாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.மேலும் பாதுகாப்பு விஷயத்தில் தாஜ்மஹாலுக்குள் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்றும் அதற்காகத்தான் ஒரே வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாஜ்மஹாலை பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயனின் கருத்து அவரது தனிப்பட்ட கண்ணோட்டத்தைத் தான் பிரதிபலிக்கிறது என்றும் தாஜ்மஹால் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.