cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் பும்ரா ஓவர் குறித்து கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் வீரர்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் என்றால் அது பும்ரா தான். சிறப்பாக விளையாடி 9 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் சாந்து அவர் மீது கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். பும்ரா மொத்தமாக இதுவரை 9 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். மொத்தம் 150 ஓவர்கள் வீசி இருப்பார் என்றாலும் கூட அதில் ஒரு இன்னிங்ஸில் அவர் 17 ஓவர்கள் தான் வீசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவருக்கு மேல் வீச வேண்டும்.இந்நிலையில் அவர் குறைவாக தான் பந்து வீசி இருக்கிறார் இந்நிலையில் பணிச்சுமை என்பதை நான் ஏற்க மாட்டேன்.
டெஸ்ட் போட்டிகளில் ஒன்றும் ஐந்து நாட்களிலும் பந்து வீசுவதில்லை இரண்டு அல்லது மூன்று போட்டிகள் தான். நாங்கள் விளையாடும் போது 25 முதல் 30 ஓவர்கள் வீசுவோம் என்று கூறியுள்ளார்.அதில் பணிச்சுமை என்றால் நீங்கள் டெஸ்ட் போட்டியை மறந்து விடுங்கள் டி 20 மட்டும் விளையாடுங்கள் அதில் தான் 4 ஓவர்கள் மட்டும் வீசி கொள்ளலாம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பல்வீந்தர் சிங் சாந்து.