IRCTC டிக்கெட் புக்கிங் பாஸ்வேர்டை மறந்து விட்டீர்களா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!!

0
218
Forgot IRCTC Ticket Booking Password? Then do this immediately!!
Forgot IRCTC Ticket Booking Password? Then do this immediately!!

IRCTC டிக்கெட் புக்கிங் பாஸ்வேர்டை மறந்து விட்டீர்களா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.குறைவான கட்டணம்,ஆன்லைன் புக்கிங் உள்ளிட்ட பல அம்சங்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருவதால் தின்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.முன் பதிவு செய்ய ட்ராவல் ஏஜெண்டுகளை நாடும் நிலை இருந்தது.இதனால் உரிய நேரத்தில் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் பலர் அவதியடைந்து வந்தனர்.

இதனால் ஐஆர்டிசி(IRCTC) மூலம் ஆன்லைன் வழியாக டிக்கெட் புக்கிங் நடைமுறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.இதனால் டிக்கெட் பெறுவது,கேன்சல் செய்வது போன்ற விஷயங்கள் எளிதாக மாறியது.

ஆனால் பலர் IRCTC மூலம் புக் செய்யும் பொழுது கடவுச்சொல்லை மறந்து விடுகின்றனர்.இதனால் அவசர காலத்தில் டிக்கெட் புக் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.இவ்வாறு டிக்கெட் புக்கிங் பொழுது பயனர் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைப்படி மீண்டும் ரீசெட் செய்துகொள்ள முடியும்.

ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட் ரீசெட் செய்வது எப்படி?

கடவுச்சொல்லை மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் வழியாக ரீசெட் செய்ய முடியும்.

மின்னஞ்சல் வழியாக கடவுச்சொல்லை மாற்றும் முறை:

1)முதலில் IRCTC என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2)பிறகு “Forgot Password” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.பின்னர் தங்களது பயனர் ஐடி(யூசர் ஐடி) பதிவு செய்யவும்.

3)அடுத்து IRCTC கணக்கு திறக்கும் பொழுது நீங்கள் செக்யூரிட்டி கேள்விகளுக்கு பதில் உருவாக்கி இருப்பீர்கள்.அந்த பதிலை பதிவு செய்த பின்னர் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும்.அது பாஸ்வேர்ட் ரீசெட் செய்வதற்கான லிங்க் ஆகும்.

4)அந்த லிங்கை திறந்து புதிய கடவுச்சொல்லை(பாஸ்வேர்டு) செட் செய்யுங்கள்.தற்பொழுது உருவாக்கப்பட்ட புதிய கடவுச்சொல் மறவாமல் இருக்க எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மொபைல் எண் வழியாக கடவுச்சொல்லை மாற்றும் முறை:

1)முதலில் IRCTC என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2)பிறகு “Forgot Password” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.பின்னர் தங்களது பயனர் ஐடி(யூசர் ஐடி) பதிவு செய்யவும்.

3)அடுத்து IRCTC கணக்கு திறக்கும் பொழுது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.பிறகு அந்த எண்ணிற்கு வரும் OTP எண்ணை அதில் பதிவிடவும்.

4)பிறகு புதிய புதிய கடவுச்சொல்லை(பாஸ்வேர்டு) செட் செய்யுங்கள்.நீங்கள் செட் செய்யும் கடவுச்சொல் பிறர் கணிக்க முடியாதவாறு இருக்க வேண்டும்.உங்கள் கடவுச்சொல் மறவாமல் இருக்க பாதுக்கான முறையில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது.