மது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

0
139

தமிழக வாணிப கழகம் தமிழ்நாட்டில் மது வகைகளையும் வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் மது பானங்களையும் மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகம் செய்யும் லைசென்சை பெற்றிருக்கிறது.

தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறதாம். எப்போதுமே லாபம் கொடுக்கும் ஒரு வாரமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் நோய்த்தொற்று காலத்தில் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே மூடப்பட்டதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு உண்டானது.

இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூபாய் 10 முதல் 500 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற குடிமகன்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தமிழக அரசு தன்னுடைய வருமானத்திற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது தமிழக தாய்மார்களும் பெண்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!