அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடையே உச்சகட்ட மோதல் வெடித்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிர்ச்சி வழங்கிய நிலையில், தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் சிட்டிங் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்து அதிர்ச்சியை வழங்கியுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் 1996- 2001 , 2016, 2021 வரையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் சந்திரசேகரன் கொல்லிமலை ஒன்றிய குழு பெருந்தலைவராக 2001- 2015 இல் பதவி வகித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சுயசியாக போட்டியிட்டு தோல்வியை தழுவினல்னார்.
கடந்த 1 வருடத்திற்கு மேலாக எந்த கட்சியிலும் இணையாத நிலையில், தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரு அணிகள் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து சென்னையில் இருக்கின்ற பன்னீர்செல்வம் இல்லத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று அவருடைய அணியில் சந்திரசேகரன் இணைந்துள்ளார்.
அவருடன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவப்பிரகாசம், கொல்லிமலை ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி, துணைத்தலைவர் கொங்கம்மாள், ஒன்றிய உறுப்பினர்கள், தனுஷ்கோடி, லட்சுமி, பாலுசாமி, பாப்பாத்தி, மற்றும் 4 ஊராட்சி மன்ற தலைவர்கள், லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நபர்கள் பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தங்கவணைக்கு அதிர்ச்சி வழங்கியுள்ளனர்.