திமுகவின் கபட நாடகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம்! கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

0
141

மத்திய வவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு பாஜகவை சார்ந்தவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய எதிர்க்கும் உதயநிதி ஸ்டாலின் இந்தி படங்களை வாங்கி தமிழகத்தில் வெளியிடுவது ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியதுடன், திமுகவின் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சி செய்யும் திறனற்ற திமுக அரசை கண்டித்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 27ஆம் தேதி தமிழக பாஜக சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம் என்று தன்னுடைய வலைதளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்ளும் எனவும், மின்கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே திமுக இந்து திணிப்பு விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு திமுகவை கண்டித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை.

இந்த சூழ்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் எதிர்வரும் 27ஆம் தேதி திமுகவை கண்டித்து பாஜக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும், திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.