பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

0
243
#image_title

பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி முடிவு.

பாஜக தரப்பில் 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியான சூழலில், பல மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியின் எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷட்டரும் ஒருவர். அவருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து ஏற்கனவே அதிரத்தில் இருந்த அவரை நேற்று இரவு கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனால் இதில் சமாதானம் ஏற்பாடு தொடர்ந்து ஜெகதீஷ் ஷட்டர் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் சவுதி விலகி காங்கிரஸில் இணைந்த சூழலில் தற்போது முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பது பாஜகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleபெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது!!
Next articleமெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!