ரிஷப் பண்ட் குணமானதும் அறைவேன்.. கபில் தேவ் பரபரப்பு தகவல்..!

0
290

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். முன்னாள் இந்திய கேப்டன் டோனிக்கு பின்னர், ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவரின் பேட்டிங்க் ஸ்டைலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎலில் டெல்லி அணியின் வீரராக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உத்தரகாண்டுக்கு தனது சொகுசு காரில் சென்ற போது கொரவிபத்து நடைபெற்றது. படுகாயமடைந்த அவரை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் தற்போது டிஸ்சார்ச் செய்யப்பட்டார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பட்டத்தை பகிர்ந்து வெளி காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டாதாக உள்ளது என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட் நலமாகி வந்ததும் அவரை அறைவேன் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் தெரிவிக்கும் போது நான் ரிஷப்பை மிகவும் விரும்புகிறேன், அவர் பூரண குணமடைய வேண்டும் எனவும் விரும்புகிறேன். அவர் இல்லாத இந்திய அணி சிதைந்து விட்டது. அவர் குணமானதும் நான் அவரை அறைவேன், ஏனெனில் உங்களை நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும் என கூறுவேன். குழந்தைகள் தவறு செய்யும் போது பெற்றொர் கண்டிப்பது போது பண்ட் குணமடைந்ததும் அவரை அறைய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Previous articleமுகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!
Next articleஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!