முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

Photo of author

By Rupa

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

Rupa

Former Chief Minister admitted to hospital Party leadership in shock!

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

கொரோனா தொற்றானது அனைத்து அரசியல் தலைவர்களையும் வெகு அளவில் பாதித்தது. அந்த வரிசை பட்டியலில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் ஒருவர்.கொரானாவின் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு தற்பொழுது தான் குணமடைந்தார். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அவருக்கு வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா இவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்த நிலையில் அந்த பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். தற்பொழுது இவருக்கு 94 வயதாகுகிறது.

இந்நிலையில் ஆஸ்துமாவால் மூச்சு விட சிரமப் பட்டு உள்ளார். பின்பு இவர் மொஹாலியில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்பே ஒருமுறை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடல் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவரது உடல் சீராக இருப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.