முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

0
205
Former Chief Minister arrested! Police action!
Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது.ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

Previous articleபூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து!
Next articleBreaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!