பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

இந்திய அணியில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ஆஸி அணிக்கு இறுதி ஓவரில், 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இறுதி ஓவரை வீசிய ஷமி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி 4 பந்துகளிலும் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் இந்த போட்டியின் ஆடும் லெவனில் ஷமி இல்லை. ஆனால் பயிற்சி போட்டியில் வெளியில் இருந்தும் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை வீச வைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்நிலையில் பூம்ராவுக்கு சரியான மாற்றும் ஷமிதான் என்று சச்சின் உள்ளிட்ட பலர் கூறியிருந்தனர். ஆனால் சுரேஷ் ரெய்னா ஷமியை பூம்ராவுக்கு மாற்று இல்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் “ஷமியை நான் பூம்ராவுக்கு மாற்று என்று நினைக்கவில்லை. பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு மாற்று வீரர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக பங்களித்துள்ளனர். ஷமி, இதைப் பற்றியெல்லாம் நினைக்காமல் அணிக்கு பங்களிப்பு செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.