கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Photo of author

By Hasini

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Hasini

Former Chief Minister meets Governor! Is this the reason?

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

தமிழகத்தின் புதிய கவர்னராக என்ஆர். ரவி அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர், அதாவது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த சந்திப்பானது குறித்து பல்வேறு தரப்பு மக்களும் எதைப்பற்றி பேசுவார்கள் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் திரும்பி வந்த பிறகுதான் அவர்கள் எதைப் பற்றி பேசினார்கள் என்பது நமக்கு ஊர்ஜிதம் ஆக தெரியும்.