நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்!

0
101
6 members of the same family killed in landslide Awful staged in Kerala!
6 members of the same family killed in landslide Awful staged in Kerala!

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்!

கேரளாவில் தற்போது கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே, மேக வெடிப்பின் காரணமாக பலத்த மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் அப்படியே வெள்ளத்தில் மூழ்குவதும் நாம் வீடியோக்களிலும், செய்திகளிலும் பார்த்து வருகிறோம்.

தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட பிளாப்பள்ளி, காவாலி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் மூன்று வீடுகள் தரைமட்டம் ஆனது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலியாகிவிட்டனர். இதைத்தொடர்ந்து மீட்பு படையினரின் உதவியுடன் இரவு, பகல் பாராமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடந்தது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிளாரம்மா (வயது 63), அவரது மகன் மார்ட்டின் (48), மார்ட்டின் மனைவி ஷினி (45), மகள்கள் ஸ்னேகா (14), சோனா (12) சாந்த்ரா (10) என்ற 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மரணமடைந்த சிசலி (50), வேணு (48), சோனியா (45), அவரது மகன் ஜோபி (15), ராஜம்மா (64), ஷாலட் (29), சரசம்மா (58) என்ற 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காஞ்சிரப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

அதன் பிறகு அவர்களது உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இது குறித்து மந்திரி வாசவன் கூறுகையில் கோட்டயம் நிலச்சரிவில் சிக்கி பலியான 13 பேரின் உடல்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையை தொடர்ந்து குட்டிக்கல் புனித ஜார்ஜ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் நாற்பத்தி எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 27 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.