உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 9 மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இன்று எடப்பாடி வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.எந்த முறைகளை மேற்கொண்டால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை காண முடியும் போன்ற ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு கூற உள்ளார்.
அந்த வகையில் அவர் முதல் திட்டமானது, அனைத்து வீடுகளுக்கும் சென்று கடந்த ஆட்சியில் அதிமுக மக்களுக்கு செய்த திட்டங்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என கூறியுள்ளனர்.நாளை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு முன்னாள் முதல்வர் செல்லகிறார்.அதனையடுத்து அங்குள்ள தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு மேலும் மக்களிடம் நேரடியாக சென்று வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.இது முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அங்கு ஆலோசனைக் கூட்டத்தினை முடித்ததும் ,மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.அதனையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வாக்குகளின் சேகரிப்பதாக கூறியுள்ளனர்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ,தேர்தல் ஆணையம் ஏதேனும் ஊழல் நடக்காமல் இருக்க பறக்கும் படையினர் அமைத்து கண்காணித்தது. அதைப் போலவே இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பறக்கும் படையினரை அமைத்துள்ளனர்.