இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!

Photo of author

By CineDesk

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!

CineDesk

Updated on:

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அவர்கள்  CSKவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படுபவர்.நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியானது தற்போது அதிக கவனத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட வயது வரம்பு கிடையாது.விளையாட்டை யார் வேண்டுமானலும்,எந்த வயதிலும் விளையாடி மகிழலாம்.

பிரவீன் தாம்பே 40 வயதிற்கு மேல் தான் ஐ.பி.எல் தொடரையே விளையாடத் தொடங்கினார். நேற்று இம்ரான் தாகிர் அவர்களும்  40 வயதுக்கு மேல் காரேபியன் கிரிக்கெட் லீக் தொடர் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.இது தான் கிரிக்கெட் விளையாட வயது ஒரு தடை இல்லை என்பதற்கான ஒரு உதாரணம்.

அவ்வாறே பத்ரிநாத் இதுவரை இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட், ஏழு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார்.இவர்  ஒருக்காலத்தில் CSKவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும்,பயிற்சியாளராகவும் தன்னுடைய பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வகையில் பத்ரிநாத் அவர்கள் “என்னையும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள்,நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் ,இந்த ஒரு ட்விட்  தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.