144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

0
32
#image_title

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது.

அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதில் காவிரி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் இருந்து திறந்துவிட கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால் அதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தங்களிடம் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக அரசு முறையிட்டது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 5000 கன அடி நீர் திறந்து விட காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.இதனால் வேறு வழியின்றி இதற்கு சம்மதம் தெரிவித்து 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்றும்,தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும் இன்று கன்னட அமைப்பினர்,150க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் கர்நாடக விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பெங்களூருவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.இதனால் தமிழக – கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.இன்று நடைபெறுவது போல் வருகின்ற 29 ஆம் தேதி மாபெரும் போராட்டம் கர்நாடக முழுவதும் நடைபெற இருக்கிறது.இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளதால் நரகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இன்று நடைபெறும் போராட்டத்தில் ஒரு சில அமைப்புகள் விலகி விட்டாலும் வருகின்ற 29 ஆம் தேதி தனது ஆதரவை தர இருப்பதாக வாப்பஸ் பெற்ற அமைப்புகள் தெரிவித்து இருக்கிறது.
அதேபோல் பெங்களூர் பந்த்தால் கர்நாடகாவில் நுழைய முடியாமல் லாரிகள்,பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே தமிழக – கர்நாடக எல்லையில் தமிழகத்தை சேர்ந்த லாரிகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.அதே போல் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

பெங்களூருவில் திரையரங்குகள்,வணிக வளாகங்கள்,ஐடி நிறுவனங்கள்,சிறு குறு கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல்,மருந்தகம் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.பள்ளி,கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.இந்நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பெங்களூர் வாழ் தமிழர்கள் பீதியில் இருக்கின்றனர்.