சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

0
271
#image_title

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார் .

திமுக ஆட்சியால் மக்கள் சூடாக இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்களை திறந்து உடலுக்கு சத்தான குளிர்ச்சியான ஆகாரங்களை வழங்குகிறோம். மெரினா லூப் சாலை, பட்டினம் பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி கடைகள் அகற்றப்படுவது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் பட்டினம்பாக்கம் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது திமுக அரசு மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் அளிக்கிறார்கள் திமுக அரசு பால் விற்பனையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறதோ என்ற கேள்வி எழுகிறது 11 மணிக்கு நிறைய இடங்களில் பால் பாக்கெட் கொடுப்பதால் பால் கெட்டுப் போய் விடுகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து 16 ம் தேதி நடக்கும் அதிமும செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் பொதுக்கூட்டம் அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது குழுவாக செயல்படக்கூடிய ஓபிஎஸ் விரைவில் தனிக்கட்சியை தொடங்கலாம் ஆனால் ஆயிரம் ஆண்டுகள் அதிமுக நிலைத்து நிற்கும்.

நாளை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வருமான வரித்துறை,அமலாக்கத்துறை மத்திய அரசின் வசம் இருப்பதால் திமுக அமைச்சர்கள் இல்லங்களில் சோதனை செய்ய சொன்னால் நிறைய அமைச்சர்கள் சிக்குவார்கள்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்ற விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலில் குதிக்கிறோம் என்று குதிக்காமல் நேரடியாக அரசியலுக்கு வந்தால் தான் அரசியலில் இருக்கும் கஷ்டங்கள் என்ன என்று தெரியும் என்றார்.

Previous articleஉரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
Next articleதனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது – பா.ஜ.க வானதி சீனிவாசன்!!