போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Photo of author

By Hasini

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு, உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இதே போல், நாமக்கல்லில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்த அதிமுகவின் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என கூறினார். அதே போல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டுக்கு முன் அதிமுக வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து சென்னையில்  ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டு பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது போராட்டத்தை அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

இதே அதிமுக ஆட்சியில், நீட் ரத்து கிடையாது என கூறிய அதிமுக அரசு இன்று எதிர்கட்சி ஆட்சி அமைத்தவுடன் அது என்னவாயிற்று என்று தமிழகம் முழுவதிலும் கவனஈர்ப்பு போராட்டம் நடத்துகிறது எனபது குறிப்பிடத்தக்கது.