#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

Photo of author

By Parthipan K

#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

Parthipan K

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று மாலை காலமானார்.

முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84), கடந்த 10-ம் தேதி மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/ABHIJIT_LS/status/1300407074560471041?s=20

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.