அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. அரசாங்க பல கட்டுப்பாடுகள் அமல்படுத்திய போதிலும் தொற்று ஏதேனும் வழிமுறைகளில் பரவி தான் வருகிறது.
சீனாவிலிருந்து தொடங்கிய இந்த கொரோனா அனைத்து நாடுகளையும் உலுக்கியது. தற்பொழுது தான் தொற்றானது குறைந்தது என்றும் மக்கள் அமைதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் அடுத்த கட்டத்தை தொடங்க ஆரம்பித்து விட்டது.அதாவது சீனாவில் சில பகுதிகளில் தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளது. தொற்றியின் வீரியம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இச்செய்தியானது உலக நாடுகளுக்கிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீண்டும் குணமடைந்து வரவேண்டுமென்று அனைத்து நாட்டு அதிபர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா அவர்கள் அவற்றிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றும் பலர் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
அந்தவகையில் நமது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அவர்கள் விரைவில் வர நோயிலிருந்து குணமடைந்த வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.