தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

0
70

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

நடப்பாண்டு ஐ.பி.எல் 20 ஓவர் தொடரின் கிரிக்கெட் போட்டியானது வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார். இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாப் டு பிளெஸ்சி இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியை தனது தலைமையில் சிறப்பாக வழிநடத்தி உள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

இதையடுத்து பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் சென்னை அணியில் தோனி தலைமையில் விளையாடிய அனுபவம் குறித்து அவர் கூறியுள்ளார். அதில்,

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட தொடங்கும்போது அணி தலைவர் குறித்த எனது எண்ணங்கள் முற்றிலுமாக வேறுபட்டதாக இருந்தது. நான் அதுவரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் முறையையே பார்த்திருந்தேன். ஆனால் தோனி தலைமையிலான கேப்டன்ஷிப் முறை எனக்கு புதிதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியில் நான் கேப்டன்ஷிப் முறை பற்றி நிறைய கற்றுள்ளேன். அதில் முக்கியமாக கேப்டன்சி என்பது தனித்துவமாக இருக்க வேண்டும் அதுவே நம்மை போட்டிகளில் அழுத்தம் ஏற்படும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் என கூறிய அவர், என்னால் தோனியாகவோ, கோலியாகவோ இருக்க முடியாது. இத்தனை ஆண்டு கால கிரிக்கெட்டில் நான் நிறைய கற்றுள்ளேன். அது எனது தலைமைத்துவ பாணியை வளர்க்க உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K