வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி. ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!
ஆகஸ்ட் 12ஆம் தேதி கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளை ரஷ்யா உலகிற்கு முதலில் களமிறக்க உள்ளது. அக்டோபர் மாதத்தின் இறுதியில் அதற்கான உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு.ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எப்படியாவது நாம் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதில் உலகமே தடுப்பூசிகளை முதலில் கண்டு பிடிப்பார்கள் என்று எதிர் நின்று கொண்டிருந்தது. இப்பொழுது ரஷ்யா உலகிற்கு முதலில் கொரோனாவிற்க்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த காமலேயா என்ற நிறுவனம் கொரோனாவை குணமாக்க மருந்தை கண்டுபிடித்து உலகிற்கு அதை முதலில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்துள்ளது.
மனிதர்கள் மீதும் செலுத்தி இதன் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மனிதர்கள் விரைவில் குணம் அடைகின்றனர்.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறியதாவது,
ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று ரஷ்யா உலகிற்கு முதன்முதலில் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் உற்பத்தி அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கும். இதனுடைய செலவு பட்ஜெட் நாட்டின் பட்ஜெட்டில் சேர்க்கப்படும்.தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம் என அவர் கூறியிருக்கிறார்.
அனைத்து நாட்டு மக்களும் கொரோனாவின் தடுப்பூசி மருந்துக்காகவே காத்திருந்த நிலையில் இந்த செய்தி அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியாக அமையும்.