எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்?

Photo of author

By Parthipan K

எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்தீப் சிங்(36).அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்(27).இவர்களுக்கு எட்டு மாதம்மாகிய அரோகி  டொஹிரி என்ற குழுந்தை உள்ளது.ஜஸ்தீப் சிங்கின் உறவினர் அமந்தீப் சிங்(39).இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரை துப்பாக்கிமுனையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

ஜஸ்தீப் சிங்,அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்,அவர்களுடைய குழந்தை அரோகி  டொஹிரி மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகிய நான்கு போரையும் கடத்தி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தை உட்பட நான்கு போரையும் போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.இறந்த நிலையில் கிடந்ததாக சிஎன்என் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் இவர்கள் எதற்காக கடத்தப்பட்டனர் ,யாரால் கடத்த பட்டனர் ஏன் கொலை செய்யப்பட்டார்கள் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.