நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

0
175

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் இதுவரை கண்டிராத பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. கொரோனா வைரஸ் வெற்றி கொள்வதற்கு அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை.இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே இன்றளவும் இவர்கள் தங்களின் அன்றாட தேவைக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனாவால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 8‌.60 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது நான்கு வகைகளாக மரபணு மாற்றமடைந்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. முதலாவது மரபணு மாற்றம் கொரோனவைரஸ் பரவத் தொடங்கிய முதல் இரண்டு மாதங்களிலேயே நடந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் கடந்த ஜூன் மாதம் இந்த வைரஸின் இரண்டாவது மரபணு மாற்றம் ஏற்பட்டு இதுவே பல தொற்றுகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் ,மூன்றாவது மரபணுமாற்றம் கடந்த ஆண்டு செப்டம்பருக்கு,அக்டோபருக்கும் இடையே ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் வெளியான தகவலின் அடிப்படையில் பிரிட்டனில் கொரோனா வைரஸின் நான்காம் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நான்காம் வகை கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கும், இதற்கு முந்தைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொரோனவைரஸ்-க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்கின்றது உலக சுகாதார நிறுவனம்.

Previous articleஇவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!
Next articleரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!