லியோ திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல்!!! இப்படியே சென்றால் 1000 கோடி கன்பார்ம்!!!

0
134
#image_title

லியோ திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல்!!! இப்படியே சென்றால் 1000 கோடி கன்பார்ம்!!!

லியோ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் நான்கு நாட்களில் லியோ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் மிகுந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகத்தில் லியோ திரைப்படத்தை வெளியிட்டது.

லியோ திரைப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின், ஜார்ஜ் மரியன், அர்ஜூன், சஞ்சய் தத், வையாபுரி, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சான்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். லியோ திரைப்படம் பல தேவைகளுக்கு மத்தியில் வெளியாகிய நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கலவையான விமர்சனங்களை பெற்ற பெற்ற லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மாபெரும் சாதனையை படைத்தது. அதாவது முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூல் செய்து உலக அளவில் புதிய சாதனையை படைத்தது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் செய்த முதல் நாள் வசூலை லியோ திரைப்படம் முறியடித்தது.

இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது லியோ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 380 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் லியோ திரைப்படம் உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.