61 வயதில் அட்டகாசம்.! 28000 ஆபாச படங்களை டவுன்லோடு செய்த பேராசிரியர்!!

Photo of author

By Jayachandiran

61 வயதில் அட்டகாசம்.! 28000 ஆபாச படங்களை டவுன்லோடு செய்த பேராசிரியர்!!

Jayachandiran

பிரான்ஸ்: சிறார்களின் 28,000 ஆபாச படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்த பேராசிரியர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இறையியல் பேராசிரியரும், முன்னாள் ஆயருமான ஜான் ஜூஸ்டன் என்பவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய 61 வயதில்  கடந்த 6 வருடங்களில் சிறார்களின் 27,000 ஆபாச படங்கள் மற்றும் 1,000 ஆபாச வீடியோவை பிரான்சில் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த குற்றத்தினை நீதிமன்றத்தில் அவரே ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் ஆபாச பட விவகாரத்தில் ஒருவருட சிறைதண்டனை விதித்துள்ளதாக அங்குள்ள செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்ததாக ஜான் ஜூஸ்டனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை சர்ச் இடைநீக்கம் செய்துள்ளது. குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பெரியோர்களே இதுபோன்ற தரக்குறைவான செயலில் ஈடுபடுவது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.