வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!!

0
167
#image_title

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!

வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்பொழுது புதிதான முறையில் மோசடி செய்ய கும்பல் கிளம்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் ரீபன்ட்(Tax Refund) என்ற பெயரில் வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்போது மோசடி நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மோசடி வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2022 – 2023ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆன்லைன் வசதி கடந்த வாரம் துவங்கப்பட்டது. ஐ.டி.ஆர்-1, ஐ.டி.ஆர்-4 படிவங்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தற்போது மோசடி செய்யும் கும்பல் தங்களை அப்டேட் செய்து கொண்டு புதிய புதிய மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது டேக்ஸ் ரீபன்ட் என்னும் பெயரில் மோசடி இமெயில்கள், குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த குறுஞ்செய்திகள் மற்றும் இமெயில்களில்  போலியான வருமான வரித்துறையின் இணையதள முகவரியை இணைத்து அனுப்புகின்றனர். அதில் வங்கி அல்லது தனிப்பட்ட விவரங்களை அளிப்போர்களிடம் அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு  பாதுகாப்பு பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டு வரி செலுத்துவோரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அந்த டுவிட்டர் பதிவில் “வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து டேக்ஸ் ரீபண்ட் என்ற பெயரில் மோசடி கும்பல் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பி வருகின்றனர். இது போல சந்தேகமான குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களில் இருந்து வரும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இந்த மோசடி குறித்து உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலுமீ புகார் அளிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளது.

 

Previous articleஇனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!
Next articleமாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!