ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடக்கும் மோசடி!! பெண்களே ஜாக்கிரதை!! நடிகை பிரக்யாவின் பதிவு..

Photo of author

By Gayathri

2022 ஆம்ஆண்டு ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. அடுத்ததாக 2023 ல் ‘என்4’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின் மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் ‘நதிகளின் சுந்தரி யமுனா’ என்ற படத்தின் யமுனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த ஆண்டில் லக்கம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இவரது ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டதாவது, “இது ஒரு கெட்ட கனவு, முழுமையாக இதை மறுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தொழில்நுட்பம் நமது வளர்ச்சிக்காகத் தான், சீரழிப்பதற்காக இல்லை எனவும் கூறியுள்ளார்.

‘ஏ ஐ’ மூலம் இந்த செயல் செய்பவர்களையும், இதனை பரப்புபவர்களையும் பார்த்தால் பரிதாபமே மேலோங்குகிறது. இந்த சூழலில் நான் மிகவும் தைரியமாக இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தந்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. இது போன்ற ‘ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் பாதிக்க கூடாது, பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.