பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்!
2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் காகிதம் இல்லா இ பட்ஜெடை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
மேலும் தற்போது அலுவலக கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்தாண்டு திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல்முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலே இந்த ஆண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை என்று அறிவித்துள்ளார். திமுக தேர்தலின் வாக்குறுதியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.