மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த நகையை விற்க அனுமதி கிடையாது!

0
131
Shock news published by the central government! From 1st April this jewelery is not allowed to be sold!
Shock news published by the central government! From 1st April this jewelery is not allowed to be sold!

மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த நகையை விற்க அனுமதி கிடையாது!

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஹால்மார்க் முத்திரை என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பதற்கு வழங்கப்படும் சான்றிதழாகும். பொதுமக்களும் நகைக் கடைகளில் ஹால்மார்க் நகையாக என்று பார்த்து வாங்கும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆறு இலக்கு எண் கொண்ட ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் நகை கடைகளில் மீது ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு வியாபாரிகளை எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முத்திரை பதிப்பதில் பல நடைமுறை சிக்கல் இருக்கின்றது. அதனை சரி செய்ய குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹால்மார்க் மையம் சென்று விண்ணப்பித்து அவர்கள் தரும் நேரத்தில் நகைகளை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு நகைகளை டெலிவரி தருவதற்கு ஒரு நாள் ஆகும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தங்க நகைகளில் 6 இலக்க எண் அடையாளம் இருந்தால் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய அனுமதி. இல்லையெனில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K