திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது.
அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் – அனந்தமங்கலம் இடையே இலவச அரசு பஸ் இயக்க உத்தரவிட்டார். அதையடுத்து நேற்று அம்மனம்பாக்கம் – அனந்தமங்கலம் இடையே பஸ் போக்குவரத்தை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அமைச்சர், மாணவியுடன் அனந்தமங்கலம் அரசு பள்ளி வரை பஸ்சில் பயணித்தார். விழுப்புரம் வடக்கு தி.மு.க., செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஓலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் உடனிருந்தனர்.