அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!!
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
ஏற்கனவே பள்ளி கல்வித்துறை நடப்பு ஆண்டு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் இனி இலவச பஸ் பாஸை TNSED Schools என்ற ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி தற்பொழுது விண்ணபித்த மாணவர்களுடைய விண்ணப்பங்களை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் 12 ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்கள் என்ற அனைவருக்கும் இணைய வழியில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து இலவச பஸ் பாஸ் பெற விண்ணபித்த மாணவ மாணவிகளின் புகைப்படத்தை அந்த மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவூர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இதில் மாணவரின் பெயர் ,வகுப்பு ,முகவரி ,பஸ் வழித்தட எண் போன்ற அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்பு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தவிடப்பட்டுள்ளது.