அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்!

Photo of author

By Rupa

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி VII-B ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 10ல் உள்ள 42 காலிப்பணியிடங்களுக்காக 10.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது மற்றும் தொகுதி VIII-ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக 11.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது.
மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான இலவச
நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது. எனவே தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களும் நேரடி பயிற்சி வகுப்பில் இணைந்து பயிலலாம். மேலும் இவ்வலுவலகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் இவ்வலுவலக நுாலகத்தில்
பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நூலகத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி VIIB மற்றும் தொகுதி VIII ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபரங்கள்(Biodata) ஆகியவற்றை தேனி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்   க.வீ.முரளீதரன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.